கடற்றொழிலாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி..!
செப்டெம்பர் மாதம் முதல் கடற்றொழிலாளர்களுக்கான ஓய்வூதிய முறையை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு சபை அறிவித்துள்ளது.
கடற்றொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அண்மையில் வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு சபையின் தலைவர் பிரேமசிறி ஜசிங்கராச்சி குறிப்பிட்டிருந்தார்.
அந்தவகையில், மீன்வளத் திணைக்களத்துடன் இணைந்து இந்த திட்டத்தை மீண்டும் முன்னெடுக்கவுள்ளதாக வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது.
பொருத்தமான நபர்கள்
எனவே, குறித்த திட்டத்திற்கு பொருத்தமான நபர்களை அடையாளம் காணும் செயல்முறை தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போதுள்ள கடற்றொழிலாளர் ஓய்வூதிய முறை நிறுத்தப்பட்டபோது, கிட்டத்தட்ட 60,000 கடற்றொழிலாளர்கள் சலுகைகளைப் பெற்று வந்துள்ளனர்.
எனவே, இந்த நடைமுறை மீண்டும் தொடங்கப்படும் போது, பழைய எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையிலான கடற்றொழிலாளர்ளுக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு சபையின் தலைவர் பிரேமசிறி ஜசிங்கராச்சி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



