இந்திய கடற்றொழிலாளர்களின் தாக்குதலில் காயமடைந்த கடற்றொழிலாளர்கள் வைத்தியசாலையில்....
யாழ்.நயினாதீவு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்களின் றோலர் படகுகள் அத்துமீறி மீன்பிடித்து வருவதுடன் நயினாதீவு கடற்றொழிலாளர்கள் மீது கல்லெறி வீச்சு தாக்குதலில் கடற்றொழிலாளர்கள் காயமடைந்துள்ளதாக வடமராட்சி வடக்கு கடற்றொழில் சங்க சமாசங்களின் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் குற்றச்சாட்டியுள்ளார்.
நடவடிக்கை எடுக்க முடியாத கையாலாகாத் தனமான கடற்றொழில் அமைச்சர் எனவும் தெரிவித்துள்ளார்.
யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று(02.02.2026) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒரு கட்டுக்குள் கொண்டுவர
இந்திய கடற்றொழிலாளர்களின் கல்லெறித் தாக்குதல்களினால் காயமடைந்த கடற்றொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்திய கடற்றொழிலாளர்களது எல்லை தாண்டுதலை இலங்கை ஜனாதிபதி ஒரு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.