உயிரிழந்த கடற்தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட உதவி (Photos)
கடந்த மாதம் இறுதி பகுதியில் கடற்தொழிலிற்க்கு சென்று காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பிறேம்குமார், தணிகைமாறன் ஆகியோரின் குடும்பத்திற்கு பண உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ் இருவரினது குடும்பத்திற்க்கும் தலா 50000 வீதம் ஒரு இலட்சம் ரூபா பணத்தினை முல்லைத்தீவு மாவட்டம் கள்ளப்பாடு கடற்தொழிலாளர் சமூகத்தினர் தமது கடற்தொழில் சொந்தங்களிடம் சேகரித்து இன்றைய (11) தினம் கையளித்துள்ளனர்.
தமது உறவுகளை இழந்த குடும்பங்களிற்க்கு உதவி புரிந்தமைக்காக பலருக்கும் தமது நன்றிகளை வத்திராயன் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கம் முகநூலில் பதிவொன்றை பதிவிட்டுள்ளது.
இவ்வாறான உதவிகளை வழங்குமாறும் கள்ளப்பாடு கடற்தொழிலாளர்கள் அனைத்து கடற்தொழிலாளர்கள் சமூகத்தினரிடமும் கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளனர்.





