யாழில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்டோர் கைது
யாழ். சுண்டிக்குளம் சாலை கடற்பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையின் போது, சட்டவிரோத நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட 05 டிங்கிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத கடற்றொழில் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக கடற்படையினர் தீவைச் சுற்றியுள்ள கரையோர மற்றும் கடற்பரப்புகளில் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
மேலதிக சட்ட நடவடிக்கைகள்
அதற்கமைய, கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 45 வயதுக்குட்பட்ட முல்லைத்தீவு, வெள்ளன்பாலம் மற்றும் புதுமாத்தளன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேன விவகாரம் : போலி பிணையாளர்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam