சுருக்குவலை தொழிலால் வடமராட்சி கடற்றொழிலாளர்கள் பாதிப்பு!
யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடி இடம்பெற்று வருவதால் தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாக கடற்றொழில் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் நேற்று(17) இடம் பெற்ற பிதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
கட்டைக்காடு கடற்றொழிலாளர்கள் அதிகளவானோர் சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடியில் ஈடுபடுவதால் அதிகளவான சிறிய மீனினங்கள் பிடிக்கப்படுவதாகவும், அம் மீனினங்கள் இறந்த நிலையில் மீண்டும் கடலில் கொட்டப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடற்றொழிலாளர்கள் பாதிப்பு
இதனால் தற்போது சிறு மீன்பிடியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் கடற்படை, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை ஏடுப்பதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அதற்கு பதிலளித்த கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரி இவ்வருடமும் அதிகளவானவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
    
    
    
    
    
    
    
    
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
    
    திடீரென பழனிவேல் செய்த காரியம், கண்ணீர்விட்டு அழுத கோமதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri