மட்டக்களப்பில் கடற்தொழிலாளர் ஒருவர் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணையத்தில் முறைப்பாடு
மட்டக்களப்பு - செட்டிபாளையம் கடற்கரையில் அனுமதியற்ற மீன்பிடி வலையை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடற்தொழிலாளர் ஒருவரை கைது செய்து முழங்காலில் இரண்டு மணித்தியாலம் வைத்து அடித்து சித்திரவதை செய்ததாக இன்று (09) மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (05.04.2026) காலை செட்டிபாளையம் கடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நந்தீசன் அனுமதியற்ற மீன்பிடி வலைக்கு பாவிக்கும் ஈயம் துண்டுகளை வைத்துக் கொண்டிருந்தபோது அங்கு சிவில் உடையில் சென்ற கல்லடி கடற்படை முகாமில் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் சென்று அவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுருக்குவலை பாவித்து மீன்பிடி
இதன்போது அவர் தான் அனுமதியற்ற மீன்பிடி வலையான சுருக்குவலை பாவித்து மீன்பிடிக்கும் குற்றத்தை ஒப்புக் கொண்டு அங்கிருந்த வலையை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த கடற்தொழிலாளரை பிடித்து இரண்டு மணித்தியாலம் முழங்காலில் இருக்க வைத்து அடித்து தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட நபர் ஒரு சர்க்கரை வியாதி நோயாளி. அதற்கான குளிசையை போடுவதற்கு விடுமாறு கோரியும் அவர்கள் அதற்கு அனுமதி வழங்காது முழங்காலில் வைத்துக் கொண்டனர். இதனை அறிந்த அவரது மனைவி சென்று தனது கணவரை முழங்காலில் வைத்து அடித்து சித்திரவதையை கண்டு உடன் அதனை கையடக்க தொலைபேசியில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவை செய்து கொண்டதை கண்ட கடற்படை புலனாய்வு பிரிவினர் குறித்த பெண்ணின் கையடக்க தொலைபேசியை பறித்து அவர் வீடியோ செய்த காட்சிளை அழித்ததுடன் அவருக்கு தகாதவர்த்தைகளால் பேசியும் அவரை கைது செய்யப் போவதாக மிரட்டி அவரை தாக்க முற்பட்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடற்றொழில் நீரியல் வளத்துறையிடம் ஒப்படைப்பு
இதனை தொடர்ந்து முழங்காலில் வைத்திருந்த கடற்தொழிலாளரை களுதாவளை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று அங்கு வைத்திருந்த பின்னர் மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல் வளத்துறை பணிப்பாளர் காரியாலய அதிகரிகளிடம் ஒப்படைத்தனர்.
பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர் கூறுகையில், நான் மட்டும் இந்த சுருக்குவலையை பாவித்து மீன் பிடிக்கவில்லை. சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் இந்து சுருக்குவலை பாவித்து மீன்பிடித்து வருகின்ற நிலையில் என்னை மட்டும் கைது செய்தது மட்டுமல்ல முழங்காலில் இருக்க வைத்து அடித்து சித்திரவரை செய்துள்ளனர். எனக்கு நீதி வேண்டும். சம்மந்தப்பட்வர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி முறைப்பாடு செய்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam