மன்னார் பள்ளிமுனை கடலில் படகு கவிழ்ந்து கடற்றொழிலாளர் பலி
மன்னார்(Mannar) பள்ளிமுனை கடற்பரப்பில் இருந்து படகில் கடற்றொழிலுக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் படகு புரண்டதில் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதன்போது மன்னார் பள்ளிமுனை மேற்கு பகுதியைச் சேர்ந்த எஸ்.ஏ.ஜான்சன்(வயது-62) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு இன்று(13) மாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகள்
உயிரிழந்தவர் உள்ளடங்களாக மேலும் சில மீனவர்கள் வல்லம் ஒன்றில் தொழிலுக்குச் சென்றுள்ள நிலையில் இன்று(13) மாலை 4 மணியளவில் திடீரென கடும் காற்று மற்றும் மழை பெய்துள்ளது.

இந்நிலையில் கடற்றொழிலாளர்கள் சென்ற படகு கடலில் மூழ்கிய போது ஏனையவர்கள் தப்பிய போதும் குறித்த கடற்றொழிலாளர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை மன்னார் வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam