வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதிக்கு கடற்றொழில் அமைச்சர் விஜயம்
யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டிற்கு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் இன்று(13)விஜயம் மேற்கொண்டார்.
கட்டைக்காட்டிற்கு விஜயம் மேற்கொண்டு அங்கு பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடி அவர்களுடைய குறைபாடுகளை அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.
கட்டைக்காட்டு மக்களின் அடிப்படை பிரச்சினையாக காணப்படும் கட்டைக்காடு சுண்டிக்குள வீதி புனரமைப்பு மற்றும் கட்டைக்காடு இயக்கச்சி வீதி புனரமைப்பு,வனஜீவராசிகள் திணைக்ளத்தின் ஆளுகைக்குள் இருக்கும் மக்களின் காணிகள் விடுவித்தல் போன்ற முக்கிய விடயங்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
உறுதி
இந்தியன் இழுவை மடி படகுகளால் கடற்றொழிலாளர்களுடைய வலைகளும் இப்பகுதியில் பாதிப்படைவது குறித்து அமைச்சர் தனது கவலையை வெளிப்படுத்தினார்.
மக்களுடைய குறைபாடுகளை கேட்டு அறிந்த அமைச்சர் இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

கடற்றொழில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக உற்பத்தி தொழில்களை ஊக்குவிக்க முயற்சித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த விஜயத்தின் போது வடமராட்சி கிழக்கு தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் மற்றும் பிரதிநிதிகள் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



கில்லியை ஓரங்கட்டி முதல் நாள் ரீ-ரிலீஸ் வசூலில் மாஸ் காட்டிய ரஜினியின் படையப்பா... தெறிக்கும் வசூல் Cineulagam
டபுள் எலிமினேஷன்.. பிக் பாஸ் 9ல் இருந்து சற்றுமுன் எலிமினேட் செய்யப்பட்ட இரண்டு போட்டியாளர்கள் Cineulagam