கடற்தொழிலாளர்களின் பிரச்சினைகளை பாராமுகமாக கடந்து செல்லும் அமைச்சர் சந்திரசேகரன்! எழுந்துள்ள குற்றச்சாட்டு
மக்களோடு மக்களாக கடல் தொழிலாளர்களின் பிரச்சனைக்கு போராடி வந்த தற்போதைய கடல் தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அமைச்சுப் பதவி கிடைத்த பின் கடல் தொழிலாளர்களின் பிரச்சினைகளை பாராமுகமாக கடந்து செல்வதாக யாழ்ப்பாணம் மாவட்ட கடல் தொழிலாளர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர்களின் ஊடக சந்திப்பு தந்தை செல்வா மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது கருத்து தெரிவிக்கும் போது அன்னலிங்கம் அன்னராசா இவ்வாறு குற்றம் சுமத்தினர்.
கடற்றொழிலாளர்களின் பிரச்சினை
அத்துடன் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த சீனாவின் அட்டைப் பண்ணைகள் தற்போதும் கிராந்தி பூநகரி பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதற்கு அமைச்சர் இந்த வித தீர்வையும் பெற்று தரவில்லை என்றும் தெரிவித்தார்.

அத்துடன் தென் இலங்க கடற்றொழிலாளர்களுக்கு ஒரு சட்டமும் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு ஒரு சட்டமும் பார்க்கப்படுவதாகவும் கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் பல முறைப்பாடுகளை தெரிவித்தும் தீர்வு கிடைக்கவில்லை இவ்வாறு தீர்வு கிடைக்காத பட்சத்தில் தாம் பாரிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் இதன் போது தெவித்தார்.
இதன் போது மன்னர் மாவட்ட கடலாறொழிலாளர் சார்பில் கருத்து தெரிவித்த எம்.எம்.ஆலம் தற்போது தமிழக அரசியல் சூடு பிடித்துள்ள நிலையில் புதிதாக கட்சி தொடங்கியவர்கள் ஆட்சியில் உள்ளவர்கள் கச்சை தீவை மீட்டு தருவோம் என்று பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்திய கடற்றொழிலாளர்கள்
இதனை தமிழக மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் ஒரு நாட்டுக்கு இறமையுள்ள ஒரு பகுதியை மீட்டு தருவோம் என்று தேர்தலுக்காக பிரச்சாரங்களை கூறி வருகின்றனர்.

மக்கள் தெளிவடைய வேண்டும் இவ்வாறான பிரச்சினைகளால் தொடர்ந்தும் இந்திய கடற்றொழிலாளர்கள் இல்லை தாண்டி எமது பகுதிக்கு வந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை அமைச்சருக்கு கூறிய போதும் அவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை தொடர்ந்தும் இவ்வாறான பிரச்சனைகள் இடம்பெற்று வருகிறது எனவே கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் கடல் தொழில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.