மட்டக்களப்பில் நடைபெற்ற கடற்றொழிலாளர்களின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்
மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜின் ஏற்பாட்டில், மாவட்ட பழைய செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (13.08.2026) இந்த கூட்டம் நடைபெற்றது.
ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்
மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.

குறிப்பாக, சட்டவிரோத கடற்றொழில், காலநிலை மாற்றத்தால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுதல், மானிய முறையில் எரிபொருள் வழங்குதல் மற்றும் கடற்றொழில் வளங்களை ஏற்றுமதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.





வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri