முல்லைத்தீவு கடலில் மீன்கள் இல்லாத நிலை! கடற்தொழிலாளர்கள் கவலை
முல்லைத்தீவு மாவட்ட கடலில் உள்ள மீன் குஞ்சுகளை சட்டவிரோத கடற்தொழிலாளர்கள் அள்ளி சென்றுள்ளதால் தற்போதைய காலத்திற்கு ஏற்ற மீன்களின் பெருக்கம் இல்லாத நிலையில் கடல் காணப்படுவதாக கடற்தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு கடலில் கடற்தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்வது குறைவாக காணப்படுவதுடன் மீன்களுக்கான தட்டுப்பாடும் காணப்படும் நிலையில் மீன்களின் விலைகளும் அதிகரித்துள்ளது.
கடற்தொழிலாளர்கள்
சுருக்குவலை தொழிலாளர்களால் கடற்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இப்போது சூடைமீன் 500, கீரைமீன் 800, சூரை மீன் 1000 ரூபாவிற்கு கடற்தொழிலாளர்கள் கடற்கரையில் விற்பனை செய்கின்றார்கள்.
படகுகள் தொழிலுக்கு சென்றாலும் மீன் இல்லாத நிலையினால் பல கடற்தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்லாத நிலையில் காணப்படுகின்றார்கள் என்றும் கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் முல்லைத்தீவு தீர்த்தக்கரை வாடியில் சென்று பார்த்தபோது கடற்தொழிலாளர்கள்களின் நிலையினை
அறிய முடிகின்றது.





அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
