முல்லைத்தீவு - மல்லாவி குளத்தின் வாய்க்காலில் மீன்கள் உயிரிழப்பு (Photos)
முல்லைத்தீவு - மல்லாவி குளத்திலிருந்து செல்லும் வாய்க்காலில் இலட்சக்கணக்கான மீன்கள் உயிரிழந்த நிலையில் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இலங்கையின் பல பகுதிகளில் வரட்சியான காலநிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் முல்லைத்தீவின் பல நீர்நிலைகளில் நீரின்றி வரண்டுபோயுள்ள நிலைமையை காண முடிவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீர் வற்றிய நிலை
துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி குளத்தில் முற்றுமுழுதாக நீர் வற்றிய நிலை காணப்படுகின்றது.
இவ்வாறான சூழலில் குளத்திலிருந்து செல்லும் வாய்க்காலில் பெருமளவான மீன்கள் இறந்து போயுள்ளன.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் அக்கறை கொண்டு செயற்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.










கிளைமேக்ஸ் மற்றும் அந்த 20 நிமிடம், ரஜினியின் கூலி படம் பற்றி வந்த முதல் விமர்சனம்... மாஸ் போங்க Cineulagam

சுவிட்சர்லாந்தில் 2 இந்தியர்களின் எதிர்பாராத சந்திப்பு: இணையத்தில் வைரலாகும் அழகிய தருணம்! News Lankasri
