மன்னார் மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவி
மன்னார் மாவட்டத்தில் நீண்ட இடைவெளியின் பின்னர் மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி கிறிஷேறா சேவியர் 3 A சித்திகளை பெற்று மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்று மருத்துவ துறைக்கு தெரிவாகி மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
கிறிஷேறா சேவியர் புலமை பரிசில் பரீட்சையில் 185 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் 4 நிலையை பெற்றிருந்ததோடு க.பொ.த சாதாரண பரீட்சையில் 9A சித்திகளையும் பெற்றிருந்தார்.
தேசிய மட்டம்
இந்த நிலையில் இம்முறை வெளியான உயர்தர பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் 3A சித்திகளை பெற்று மாவட்டத்தில் முதல் நிலை பெற்றது மாத்திரம் இல்லாமல் 7 வருடங்களின் பின்னர் தேசிய ரீதியில் 27ஆவது நிலையை பெற்று அதி விசேட தேர்ச்சி பெற்று மருத்துவ துறைக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்/ சித்திவிநாயகர் இந்து கல்லூரி
5 வருடங்களாக உயர்தர பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகின்ற போதிலும் சவால்களைக் கடந்து மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரி மணவர்கள் சாதித்து காட்டியுள்ளனர்.
இந்நிலையில் வெளியாகியுள்ள உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரியில் கல்வி பயின்ற மூன்று மாணவர்கள் 3 A சித்தி பெற்றுள்ளதாகவும், இரண்டு மாணவர்கள் 2A மற்றும் B சித்திகளையும் பெற்று பாடசாலைக்கும் மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் பிரதி அதிபர் சுரேன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ரெக்ஸ் அருள்நேசன் ஷதுர்ஷா கலைப்பிரிவில் 3 A சித்திகளை பெற்று
மாவட்டத்தில் முதல் நிலையும், உயிரியல் பிரிவில் ரவீந்திரன் சர்மிலன் 3 A
சித்திகளை பெற்று 5 நிலையையும், சிவசம்பு வர்மினா,சிவசம்பு வர்மிஜன் முறையே 9 ஆம்
10 ஆம் நிலையையும் பெற்றுள்ளதாகவும், கணித பிரிவிலே அமலதாஸ் அலிஸ்ற் பிரட்லி
குரூஸ் A 2 B சித்தியை பெற்று 7 ஆம் நிலையையும் பெற்றுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |