திடீர் மாரடைப்பால் மரணம்.. அமெரிக்காவின் சிறப்பு முத்திரையைப் பெற்ற முதல் இலங்கையர் பலி
புகழ்பெற்ற 'SEAL Trident' முத்திரையைப் பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமைக்குரிய லெப்டினன்ட் கோயன் சமித (Lieutenant Koyan Chamitha) இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
அமெரிக்க கடற்படையின் எலைட் 'நேவி சீல்' (U.S. Navy SEAL) அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து, SEAL Trident' முத்திரையை பெற்ற ஒரே இலங்கையர் அவர் ஆவார்.
வெலிசர கடற்படை விடுதியில் தங்கியிருந்த போதே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரலாற்றில் முக்கிய மைல்கல்
முதற்கட்ட தகவல்களின்படி, அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

கடற்படையின் விசேட படகுப் படையணியை (Special Boat Squadron - SBS) சேர்ந்த லெப்டினன்ட் சமித, கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற உலகின் மிகக் கடுமையான இராணுவப் பயிற்சியை முடித்து நாட்டுக்குத் திரும்பியிருந்தார்.
இவரது இந்த சாதனை இலங்கை இராணுவ வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
சந்தோஷ செய்தியை வெளியிட்டுளள சிறகடிக்க ஆசை வெற்றி மற்றும் அவரது மனைவி... ஆனா இது வேற நியூஸ் Cineulagam