நிந்தவூர் பிரதேச சபையின் கன்னி அமர்வு
நிந்தவூர் பிரதேச சபையின் புதிய 01ஆவது சபை கூட்டமர்வு நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் ஆரம்பத்தில் தேசியக் கொடியேற்றி சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் (ஜேபி) ஆரம்பித்து வைத்தார்.
பின்னர் நிந்தவூர் பிரதேச சபையின் முதலாவது சபை அமர்வு நடவடிக்கைகள் சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் (ஜேபி) தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் உப தவிசாளர் சட்டத்தரணி எம் .ஐ .இர்பான் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் பங்குபற்றலுடன் ஆரம்பமாகின.
இதன்போது மத அனுஸ்டானம் இடம்பெற்ற பின்னர் தவிசாளர் உரையுடன் உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் அறிமுகம் மற்றும் உரை என்பன தொடர்ச்சியாக இடம்பெற்றன.
பின்னர் ஆலோசனை குழுக்கள் நியமித்தல் நிதி மற்றும் கொள்கை உருவாக்க குழு, வீடமைப்பு சமூக அபிவிருத்திக் குழு, தொழில்நுட்ப சேவைக் குழு, சுற்றாடல் வாழ் வசதி, செலவீனம் தொடர்பாக நிதிப்பிரமாணம் அதிகாரம் அளித்தல், கொடுப்பனவு அங்கீகாரம் அளித்தல், காசோலையில் கையொப்பமிடும் உத்தியோகத்தர்களை தெரிவு செய்தல், மாகாண சபையின் குறித்து ஒதுக்கப்பட்டுள்ள PSDG,CBG, AIP வேலை திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல், செலவு தொடர்பாக தவிசாளரினால் நேரடியாக அனுமதி வழங்கும் உச்ச எல்லை தொடர்பாகவும், பெறுகை நடைமுறை குழுக்கள் தாபித்தல், பெறுகைக் குழு,விலை மதிப்பீட்டுக் குழு, ஏற்றுக்கொள்ளும் குழு, தொடர்பில் சபையில் கலந்துரையாடப்பட்டன.









ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
