போர் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்ட சீன உளவு பலூன்! அமெரிக்காவின் திட்டவட்ட அறிவிப்பு
போர் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்ட சீன உளவு பலூனின் பாகங்களை சீனாவிடம் ஒப்படைக்க முடியாது என்று அமெரிக்கா திட்ட வட்டமாக தெரிவித்துள்ளது.
வர்த்தக ரீதியிலான விமானங்கள் பறக்கும் உயரத்திற்கு அதிகமான உயரத்தில் அந்த உளவு பலூன் பறந்த நிலையில் அமெரிக்க பாதுகாப்பிற்கு இந்த பலூன் அச்சுறுத்தலாக விளங்கியுள்ளது.
ராட்சத பலூனின் பாகங்கள்
உளவு பலூனை அணு ஆயுத ஏவுதளம் அருகே சுட்டு வீழ்த்தினால் பாதிப்பு ஏற்படும் என்று அச்சுறுத்தல் நிலவியதால் அது அட்லாண்டிக் கடல்பரப்பில் பறந்த போது அதிபர் ஜோ பைடனின் உத்தரவையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க போர் விமானங்கள் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் ஜான் கெர்பி,
கடல் மேற்பரப்பில் விழுந்த ராட்சத பலூனின் பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடலுக்கு அடியில் சென்ற பலூன் சிதைவுகளை மீட்கும் பணி நடந்து வருகின்றது. மேலும், தங்களுக்கு கிடைத்த தகவலை பகுப்பாய்வு செய்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.





தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri
