போராளிகளுக்கான முதலாவது அலுவலகம் திறப்பு (Video)
வவுனியாவில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் முதலாவது அலுவலகமானது திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா - ஆலடி வீதி, தோணிக்கல் பகுதியில் முன்னாள் போராளி செ.அரவிந்தன் தலைமையில் இன்றையதினம் (09.07.2023) இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
போராளிகளின் நலன் சார்ந்து அமைக்கப்பட்ட போராளிகள் நலன் புரிச்சங்கத்தின் அலுவலகத்திற்கான பெயர்ப்பலகையை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் திரை நீக்கம் செய்து வைத்துள்ளார்.
திருவுருவப் படங்களுக்கு மலரஞ்சலி
மேலும், அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படங்களுக்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில்
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், மூத்த கலைஞர் தமிழ்மணி மேழிக்குமரன், சமூக செயற்பாட்டாளர்கள், வடகிழக்கினை சேர்ந்த முன்னாள் போராளிகள், நலன்புரி சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.







வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் News Lankasri
