இலங்கைக்கான முதலாது நியூசிலாந்து உயர்ஸ்தானிகர்
இலங்கைக்கான நியூசிலாந்தின் முதலாவது உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள மைக்கல் அப்பிள்டன் தனது நியமனத்திற்கான கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்துள்ளார்.
இதுவரை இலங்கையுடன் தூதரக உறவுகள் இந்தியாவின் புது டெல்லியில் உள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்த நிலையில் இலங்கை மக்கள் மற்றும் அரசாங்கத்துடனான இருத்தரப்பு உறவுகளை கட்டியெழுப்புவதற்காக பணிகளை கொழும்பில் உள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகம் மேற்கொள்ள உள்ளதாக இலங்கைக்கான நியூசிலாந்தின் புதிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் தற்போது திறக்கப்பட்டுள்ள நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகம் உலகில் 51 வது உயர்ஸ்தானிகரகம் என்பதுடன் தெற்காசியாவில் இந்தியாவின் புது டெல்லிக்கு அடுத்த திறக்கப்பட்டுள்ள இரண்டு உயர்ஸ்தானிகமாகும்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகர், கடந்த தசாப்தங்களாக பணியாற்றிய நியூசிலாந்தின் இலங்கைக்கான கௌரவ தூதுவர் சேனக சில்வாவின் அயராதம உழைப்பிற்கு நன்றி கூற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் எனவும் கூறியுள்ளார்.
அத்துடன் இலங்கைக்கான முதல் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் இரண்டு நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகளை மேலும் விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.