கொலை முயற்சிக்குப் பின் ட்ரம்ப் தொடர்பாக வெளியான முதல் காணொளி
அமெரிக்க குடியரசுக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) பேரணியில் நடந்த கொலை முயற்சிக்குப் பின் டிரம்ப் தொடர்பான காணொளியொன்று வெளியாகியுள்ளது.
குறித்த காணொளியில், டிரம்ப் பாதுகாப்பாக விமானத்திலிருந்து தரையிறங்குவதை அவதானிக்க முடிகின்றது.
அமெரிக்க பென்சில்வேனியா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் டிரம்ப் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
ஜோ பைடன்
தலையை நோக்கி துப்பாக்கியால் சுடப்பட்ட போதிலும், தோட்டா காதடியால் சிராய்த்துக் கொண்டு சென்றதால் ட்ரம்ப் உயிர் தப்பியுள்ளார்.
First Footage of Trump after failed assassination attempt https://t.co/R4zLBwy0FE
— Mossad Commentary (@MOSSADil) July 14, 2024
அதன்பின்னர் அவருடைய பாதுகாவலர்கள் ட்ரம்ப்பை பாதுகாப்பாக அழைத்து சென்றதையடுத்து, அவருடைய உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என அமெரிக்க ஊடகங்களால் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri