அமெரிக்காவின் முதல் பெண் சீக்கிய நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மன்பிரீத் பதவியேற்பு
அமெரிக்காவின் முதல் பெண் சீக்கிய நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மன்பிரீத் மோனிகா சிங் பதவியேற்றுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை டெக்சாஸில் உள்ள ஹாரிஸ் கவுண்டி சிவில் நீதிமன்றத்தில் நீதிபதியாக இவர் பதவியேற்றுள்ளார்.
ஹூஸ்டனில் பிறந்து வளர்ந்த மோனிகா தற்போது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பெல்லாயரில் வசித்து வரும் நிலையில், 20 ஆண்டுகளாக சட்டத்தரணியாகவிருந்த மோனிகா உள்ளூர், மாநில மற்றும் தேசிய அளவில் பல சிவில் உரிமை அமைப்புகளில் ஈடுபட்டுள்ளார்.
ஹூஸ்டனை பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த பதவியேற்பு விழாவிற்கு மாநிலத்தின் முதல் தெற்காசிய நீதிபதியான இந்திய-அமெரிக்க நீதிபதி ரவி சாண்டில் தலைமை வகித்துள்ளார்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 22 மணி நேரம் முன்

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri

IQ Test: சிறையிலிருந்து தப்பித்தவர் யார்? 5 வினாடிகளில் புதிரைத் தீர்த்து மக்களை காப்பாத்துங்க Manithan
