யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முதலாம் நாள் நினைவு அஞ்சலி (Photos)
யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு வாரத்தின் முதலாம் நாள் நினைவு அஞ்சலி, யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி வளாகத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஒரு நிமிட அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய நினைவேந்தலைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர் சங்க பிரதிநிதிகளால் மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு ஈகைச்சுடரும் ஏற்றப்பட்டது.
இதனையடுத்து யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகம் கருத்து வெளியிட்டதாவது,
“முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பின் இறுதி நாட்களை முன்னிட்டு இவ்வாரம் இன அழிப்பு வாரமாக நினைவேந்தல்கள் வடகிழக்கு தமிழர் தாயகமெங்கும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் கிட்டதட்ட 146000 பேருக்கு மேலாக முள்ளிவாய்க்காலில் இவ் அரசால் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
இவ்வாரத்தில் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருந்தாலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி மற்றும் நினைவேந்தலை தமிழர் தாயகம் இதயபூர்வமாக கடைப்பிடிக்கவேண்டும்” என பல்கலைக்கழக மாணவ சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதன்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவ ஒன்றிய தலைவர், யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர், யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர்கள், யாழ். பல்கலை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 11 மணி நேரம் முன்
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
குக் வித் கோமாளி 7வது சீசனில் அய்யனார் துணை சீரியல் ஜோடி... வேறு யாரெல்லாம் பாருங்க, வீடியோ Cineulagam