மன்னார் மாவட்டத்தில் இவ்வருடத்தின் முதலாவது கோவிட் மரணம் பதிவு
மன்னார் மாவட்டத்தில் நேற்றையதினம்(1) கோவிட் மரணம் ஒன்று பதிவாகியுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 35 கோவிட் மரணங்கள் பதிவாகி உள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்றைய தினம்(1) இவ் வருடத்தின் முதலாவது கோவிட் தொற்று மரணம் பதிவாகி உள்ளது.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 70 வயதுடைய முதியவர் ஒருவர் கடந்த 30 ஆம் திகதி மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையின் போது கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கோவிட் தொற்றின் காரணமாக ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல் காரணமாக நேற்றைய தினம்(1) சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இவ்வருடத்திற்கான முதலாவது கோவிட் மரணம் நேற்று பதிவாகி உள்ளது.தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் 35 கோவிட் மரணங்கள் பதிவாகி உள்ளது.
மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 3183 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் கடந்த வருடம் 2021 ஆம் ஆண்டு 3166 கோவிட்
தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
