மட்டக்களப்பில் முதல் கொரோனா மரணம் பதிவு
மட்டக்களப்பில் முதல் கொரோனா மரணம் தொடர்பான பதிவு இன்று மாலை பதிவுசெய்யப்பட்டுள்ளது.
காத்தான்குடியை சேர்ந்த 65வயதுடைய நபர் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு இரத்தமாற்று சிகிச்சை மேற்கொண்டுவந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக அட்டாளைச்சேனை பிரதேசத்தினை சேர்ந்த ஒருவரும் இரு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்திருந்தபோதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த ஒருவர் இன்று உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணத்தில் கொரோனா நோயாளர்களின் மரணம் 05ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீரியலில் இருந்து வெளியேறிய சஞ்சீவ் கயல் சீரியலுக்காக வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri