நீண்ட இடைவெளியின் பின் சீன சுற்றுலாப் பயணிகள் இலங்கை விஜயம்
நீண்ட இடைவெளியின் பின்னர் சீன சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
கோவிட் - 19 பெருந்தொற்று நிலைமைகளின் பின் முதல் தடவையாக சீன சுற்றுலாப் பயணிகள் இலங்கை விஜயம் செய்துள்ளனர்.
சீனாவின் குவான்சொஸுவிலிருந்து 115 சீன சுற்றுலாப் பயணிகள் ஶ்ரீலங்கன் விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
சீன சுற்றுலாப் பயணிகள்
சீன சுற்றுலாப் பயணிகளின் வருகை இலங்கை சுற்றுலாத்துறைக்கு பெரும் ஊக்கமாக அமையும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் வாராந்தம் ஒன்பது நேரடி விமானப் பயணங்களை சீனாவிற்கு மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் இந்த விமானப் பயணங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.





ரஷ்யா, சீனாவுடன் ஆயுதப்போட்டி ஏற்படும் அச்சம்: அதிர்ச்சியூட்டும் உத்தரவை பிறப்பித்த செயலாளர் News Lankasri
