உத்திக பிரேமரத்னவின் வாகனம் மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: விசாரணையில் சிக்கிய பிரதான பொலிஸ் அதிகாரி
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவியதாகக் கூறப்படும் அனுராதபுரம் முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சீவ மஹாநாமவை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கைது செய்துள்ளது.
அன்றைய அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தை குறித்த அரசியல்வாதியே அவரது உதவியாளர்களுடன் அரங்கேற்றியதாக ஜூன் 14 அன்று இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்திருந்தது.
கடந்த செப்டம்பர் 17, 2023 அன்று, பிரேமரத்ன இரவு 10:35 மணியளவில் அனுராதபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்குத் திரும்பிய உடனேயே அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் குழு ஒன்று அவரது கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக முதலில் தெரிவிக்கப்பட்டது.
குற்றப் புலனாய்வுத் துறை
எனினும் குறித்த தாக்குதலில் நாடாளுமன்ற உறுப்பினரின் உயிருக்கு ஆபத்து இன்றி தப்பித்திருந்தார்.

இந்நிலையில். வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினரை குறிவைத்து காரில் வந்த சில சந்தேகநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு அருகில் பாதுகாப்பை பலப்படுத்த விசேட அதிரடிப்படையினர் (STF) ஈடுபடுத்தப்பட்டனர்.
பின்னர், இது தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் துறையிடம் (சிஐடி) ஒப்படைக்கப்பட்டது.
இராணுவ புலனாய்வாளர்கள் முன்னிலையில் தாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்: துப்பாக்கி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வி
உத்திக பிரேமரத்ன
தொடர்ந்து 27 பெப்ரவரி 2024 அன்று, உத்திக பிரேமரத்ன பதவியில் இருந்து விலகியிருந்தார்.

அதைத் தொடர்ந்து பிரேமரத்ன அரசியல் தஞ்சம் கோரி கனடாவுக்குச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதை அவர் மறுத்து, கனடாவில் வேலை விசாவை எதிர்பார்ப்பதாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு: விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவினரிம் ஒப்படைப்பு
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri