பதவி விலகினார் மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை உறுதிப்படுத்தினார்.
இதன்படி, பிரேமரத்ன பதவி விலகல் செய்ததையடுத்து வெற்றிடமாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்படும் என நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16வது நாடாளுமன்ற தேர்தல்
2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளராக அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினராக உத்திக பிரேமரத்ன அறிவிக்கப்பட்டார்.
அவர் 133,550 வாக்குகளைப் பெற்று இலங்கையின் 16வது நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனத்தைப் பெற்றுக்கொண்டார்.
எனினும் பதவி விலகளுக்கான காரணத்தை பிரேமரத்ன இன்னும் அறிவிக்கவில்லை ரன்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |