பல கோடி ரூபா அள்ளித்தரும் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நிலை (video)
எந்த ஒரு தொழிலாயினும் அதில் ஏற்ற இறக்ககங்கள் இருப்பது இயல்பே. எல்லாக்காலத்திலும் லாபம் ஈட்டித் தரும் தொழிலும் இல்லை; எப்போதும் நஷ்டத்தையே சந்தித்துக் கொண்டிருக்கும் தொழிலும் இல்லை.
ஆனால், தொடர்ச்சியான பல்முனைத் தாக்குதலைச் சந்தித்து வரும் தொழிலில் ஈடுபடுபவர் எவராயினும் மனத்தளர்ச்சி அடைவது தவிர்க்க இயலாதது. நீர்கொழும்பில் முக்கியத் தொழில் மையமான கிம்புலாபிட்டிய நகரமும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் தங்களது வளர்ச்சிக்கு வாய்ப்பாக பட்டாசுத் தொழிலையே நம்பி இருக்கின்றன.
ஆனால், சமீப வருடங்களில் அந்தப் பட்டாசுத் தொழில் சந்தித்து வருகின்ற இடர்பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல.
நமது நாட்டின் பட்டாசுத் தேவையில் சுமார் 95 சதவீதத்தைப் பூர்த்தி செய்து வருடந்தோறும் பல கோடி ரூபா அளவுக்கு வருமானம் ஈட்டக்கூடிய பட்டாசுத் தொழில் கடந்த 3, 4 வருடங்களாக ஈஸ்டர் தாக்குதல், கோவிட் பரவல், நாட்டின் பொருளாதார நெருக்கடி இப்படி பல காரணங்களால் மிகப்பெரிய பின்னடைவை எதிர்கொண்டுள்ளது.
இந்த நிலையில் பட்டாசு உற்பத்தி மற்றும் அந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி என்ன என்பது தொடர்பில் பார்க்கலாம்,



