சுகாதார உத்தியோகத்தர்களுக்கு தீயணைப்பு தொடர்பான பயிற்சி செயலமர்வு
தீ விபத்து மற்றும் அது தொடர்பான அனர்த்த நிலைமைகளின் போது தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக சுகாதார உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கான பயிற்சி நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீனின் வழிகாட்டலில் பிராந்திய பொது சுகாதாரப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.அஜ்வத்தின் ஒருங்கிணைப்பில் குறித்த பயிற்சி செயலமர்வு இடம்பெற்றது.
கலந்து கொண்டவர்கள்
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.பி.அப்துல் வாஜித் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் கல்முனை பிராந்தியத்தில் உள்ள வைத்தியசாலைகள் உள்ளிட்ட சுகாதார நிறுவனங்களிலிருந்து குறித்த பயிற்சி செயலமர்விற்காக தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டர்.