நீதிமன்ற சிறைக்கூண்டில் கணவருக்காக மனைவி செய்த செயல்! அதிர்ச்சியில் பொலிஸார்
சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கணவருக்கு போதைப்பொருட்களை கொடுத்த மனைவி ஒருவர் கெக்கிராவை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கெக்கிராவை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் மேலும் சில கைதிகளுடன் வழக்கு விசாரணைக்காக கெக்கிராவை நீதவான் நீதிமன்றத்துக்கு நேற்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
விசாரணை
இதன்போது கைதிகள் அனைவரும் கெக்கிராவை நீதவான் நீதிமன்றத்தின் சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ள நிலையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவரின் மனைவி தனது கணவருக்கு பொதி ஒன்றை கொடுத்துள்ளார்.
இதனை அவதானித்த சிறைச்சாலை அதிகாரிகள் மனைவி கொடுத்த பொதியை சோதனையிட்டு பார்த்த போது, அதற்குள் இருந்து 480 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 300 கிராம் புகையிலை ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்து கைதியின் மனைவி கெக்கிராவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கெக்கிராவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



