மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களின் தீப்பந்த போராட்டம்
கறுப்பு ஜனவரியை முன்னிட்டு மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட ஊடகவியலாளர்கள் தீப்பந்தங்களை ஏந்தியவாறு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது நேற்று(30) மாலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியருகில் நடைபெற்றுள்ளது.
ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர்கள் படுகொலை ஆகியவற்றினை குறிக்கும் வகையில் கறுப்பு ஜனவரியை அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
அஞ்சலி
இந்த நிலையில் ,குறித்த போராட்டமானது மட்டக்களப்பு.ஊடக அமையம் மற்றும் மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் தலைவர் வா.கிருஷ்ணகுமார் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, முதலில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து தீப்பந்தம் ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அத்தோடு, பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளுடன் நீதி கோரிய போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
தீப்பந்த போராட்டம்
இந்த போராட்டத்தில் ஊடகவியலாளர்கள்,மதத்தலைவர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டு படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுத்தனர்.
இதன்போது இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டும்,ஊடக சுந்திரத்தினை உறுதிப்படுத்து,கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு பொறுப்புக்கூறு,ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் அடக்காதே போன்ற கோசங்களை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எழுப்பினார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 15 மணி நேரம் முன்

பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, ரூட்டை மாற்றிய பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன்... வைரலாகும் வீடியோ Cineulagam
