தூசுதட்டப்படும் பதினொரு வழக்குகள்! தேர்தலுக்கு முன்னர் மேலும் பல கைதுகள்
கடந்த அரசாங்கங்களின் காலத்தில் நடைபெற்ற மோசடி, சட்டவிரோத சொத்துக்குவிப்பு விடயங்களுடன் தொடர்புடைய பதினொரு வழக்குகள் தற்போதைக்குத் தூசு தட்டப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
இதன்படி, முன்பு நடைபெற்ற ஊழல், மோசடி மற்றும் சட்டவிரோத சொத்துக் குவிப்பு விடயங்கள் தொடர்பில் வழக்குகள் பதியப்பட்டு, பின்னர் விசாரணைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பதினொரு வழக்குகளையே மீண்டும் முன்னெடுக்க தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
துரிதமான விசாரணைகள்
அதன் பிரகாரம் நான்கு வழக்குகளின் விசாரணைகளை நிறைவு செய்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார், சட்ட மா அதிபரின் ஆலோசனைக்காக அவற்றை அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் நான்கு வழக்குகள் தொடர்பான கோப்புகள் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஏனைய மூன்று வழக்குகள் தொடர்பிலும் துரிதமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலும் உள்ளூராட்சித் தேர்தலுக்கு முந்திய காலகட்டத்தில் முன்னைய அரசின் ஐந்துக்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
