கனடாவில் போதைப்பொருள், துப்பாக்கிகள் மீட்பு - இரு தமிழர்கள் கைது
துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் குறித்த விசாரணையில் இரண்டு தமிழர்கள் மீது யோர்க் பிராந்திய பொலிஸார் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்.
Whitby நகரை சேர்ந்த 23 வயதான அஜய்சன் பிரேமச்சந்திரன், மார்க்கம் நகரை சேர்ந்த 24 வயதான கமீஷா கமலநாதன் ஆகியோர் மீது இந்த குற்றச்சாட்டுகளை பொலிஸார் பதிவு செய்தனர்.
மார்க்கம் குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இது குறித்த விசாரணையில் துப்பாக்கிகளையும் போதைப் பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

காரில் இருந்து ஆயுதங்கள் மீட்பு
கடந்த 30ம் திகதி இரவு 10:40 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. பொலிஸார் வந்து பார்த்தபோது, காரில் 2 பேர் தூங்கி கொண்டிருந்தனர். இதனையடுத்து ஒரு ஆணும் பெண்ணும் சோதனை செய்யப்பட்டனர், பின்னர் அதிகாரிகள் ஒரு கைத்துப்பாக்கி, ஒரு சைலன்சர், உடல் கவசம், முகமூடிகள், ஒரு கத்தி என்பவற்றை மீட்டனர்.
இதனை தொடர்ந்து மார்க்கம் நகர இல்லமொன்றில் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் கணிசமான அளவு வெடிமருந்துகளை கண்டுபிடித்தனர். Whitby ஐ சேர்ந்த அஜய்சன் பிரேமச்சந்திரன் ஆயுதம் வைத்திருந்தமை உட்பட ஒன்பது குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.
மார்க்கம் பகுதியைச் சேர்ந்த 24 வயதான கமீஷா கமலநாதன், துப்பாக்கியை கவனக்குறைவாக பதுக்கி வைத்திருந்தமை மற்றும் ஆயுதம் வைத்திருந்தமை உட்பட ஏழு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri