வடமராட்சி கிழக்கு மணல்காடு சவுக்கம் காட்டில் தீ பரவல்: கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் உள்ள சவுக்கம் காட்டில் ஏற்பட்ட தீ பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் நேற்று (30.03.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கை
தீ பரவல் குறித்து தகவல் கிடைத்ததும் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் உபதவிசாளர் காந்தரூபன், செயலாளர் மற்றும் பிரதேச சபை ஊழியர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தண்ணீர் பாய்ச்சி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

குறித்த சவுக்கம் மரக் காட்டில் அடிக்கடி விஷமிகள் தீவைப்பது பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், தினமும் சுமார் 50-க்கும் மேற்பட்ட விறகு வியாபாரிகள் சவுக்கம் மரங்களை வெட்டி விறகு தேவைக்காக எடுத்துச் செல்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தீயணைப்பு பணிகளில் பிரதேச மக்கள் இணைந்து உதவி செய்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனிடையே, வனவள திணைக்கள அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.
