வவுனியாவில் வர்த்தக நிலையம் ஒன்றில் திடீர் தீ பரவல்
வவுனியா, முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள கடைத் தொகுதி ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்தானது இன்று (30) மதியம் ஏற்பட்ட நிலையில் விரைந்து செயற்பட்ட வவுனியா மாநகரசபை தீயணைப்பு படை தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தது.
பொலிஸார் விசாரணை
வவுனியா, முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள விவசாய உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையின் மேல்மாடியில் இருந்த அதன் களஞ்சியசாலையில் திடீரென தீப்பற்ற ஆரம்பித்தது.
இதனையடுத்து, கடை உரிமையாளரால் வவுனியா பொலிஸார் மற்றும் வவுனியா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு என்பவற்றுக்கு அறிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த தீயணைப்பு பிரிவினரும், வவுனியா பொலிஸாரும் இணைந்து பல மணிநேர போராட்டத்தின் பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.
இருப்பினும் ஒரு தொகுதி விவசாய உபகரணங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.









