மின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு!
மின்சார திருத்தச் சட்டம் திரிபுபடுத்தப்பட்ட முறையில் திருத்தப்பட்டுள்ளதாகவும், ஒப்பந்ததாரர்களுக்கு எளிதாக்குவதற்காகவும் திருத்தப்பட்டுள்ளதாகவும் மின்சார பயனர் சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக மின் கட்டணத்தை அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
ஐந்து மில்லியன்
“இப்போது மின்சார வாரியம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு நிறுவனங்களில் சேர விரும்பாத ஊழியர்கள் வெளியேறுவதற்கான ஒரு அமைப்பு வகுக்கப்பட்டுள்ளது.
இது முடிந்ததும், வெளியேறும் ஒவ்வொரு ஊழியருக்கும் CEB ஐந்து மில்லியன் ரூபாய் வரை ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்கும்.
சுமார் ஐந்தாயிரம் ஊழியர்கள் வெளியேறினால், அவர்கள் ஐந்து மில்லியன் ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும், அதாவது இரண்டாயிரத்து ஐநூறு மில்லியன் (25 பில்லியன் ரூபாய்).
இந்த அளவு தொகையை ஈடு செய்வதற்கு எதிர்காலத்தில் நுகர்வோரிடமிருந்து மின் கட்டணங்கள் மூலம் இதனை அறவிட திட்டங்கள் இருக்கலாம்.
எனவே, பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு ஈடுசெய்ய மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என்ற உத்தரவாதத்தை அரசாங்கத்திடம் நாங்கள் கோருகிறோம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri
