ரஷ்ய எண்ணெய் கிடங்கில் உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் பாரிய தீ விபத்து
ரஷ்யாவின் தெற்குப் பகுதியான கிராஸ்னோடர் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்கு ஒன்றில், வீழ்த்தப்பட்ட ட்ரோன்களின் சிதறிய பாகங்கள் விழுந்ததால் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பொல்டாவ்ஸ்காயா பகுதியில் இன்று(16)அதிகாலை நடைபெற்ற இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ட்ரோன் தாக்குதல்
எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக அப்பகுதியையும், ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியா தீபகற்பத்தையும் இணைக்கும் உள்ளூர் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களாக உக்ரைன் தொடர்ந்து ரஷ்யாவின் எரிசக்தி நிலையங்களைக் குறிவைத்துத் தாக்கி வருவதால், புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கிராஸ்னோடரில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு, பொதுமக்கள் மத்தியில் பீதி நிலவி வருவதாக பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மறுபுறம், மாஸ்கோவிற்கு வடகிழக்கே உள்ள யாரோஸ்லாவ் பிராந்தியத்தின் ரைபின்ஸ்க் நகரில் உள்ள எரிபொருள் கிடங்கில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
172 ட்ரோன்கள்
எரிந்த சாம்பல் துகள்கள் காற்றில் பரவினாலும், அவை சுற்றுச்சூழலுக்கோ அல்லது விவசாயத்திற்கோ பாதிப்பை ஏற்படுத்தாது என ஆளுநர் மிகைல் யெவ்ரியேவ் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், வோல்கா நதியில் உள்ள ரைபின்ஸ்க் நீர்த்தேக்கம் மாசுபடுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக மிதக்கும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரே இரவில் மட்டும் உக்ரைனின் 172 ட்ரோன்களை தங்களின் வான் பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்தியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கைக் குடும்பம்! விவகாரத்தில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம்