வவுனியா புகையிரத நிலையம் அருகில் திடீரென தீப்பரவல்
வவுனியா- புகையிரத நிலையம் அருகில் இருந்த மரம் ஒன்றில் திடீரென தீப்பரவல் ஏற்பட்ட நிலையில் மாநகரசபை தீயணைப்பு பிரிவு விரைந்து செயற்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்று இரவு (23.07) 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தீப்பரவல்
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான விடுதிகள் மற்றும் புகையிரத நிலையப் பகுதி என்பன துப்பரவு செய்யப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில், வவுனியா புகையிரத நிலையம் அருகில் இருந்த மரம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இதனை அவதானித்தவர்கள் உடனடியாக வவுனியா மாநகரசபைக்கு தெரியப்படுத்தியதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு பிரிவினர் நீரினை விசிறி தீயிணை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
6 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் திரைப்படம் செய்துள்ள வசூல்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
ஜனனி, சக்திக்கு எதிராக குணசேகரன் போடும் திட்டம், கதிர் செய்யப்போவது என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam