அக்கரப்பத்தனையில் லயன் குடியிருப்பில் தீ விபத்து
நுவரெலியா (Nuwara Eliya) - அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிலாஸ்கோ தோட்டம் நெதஸ்டல் பகுதியிலுள்ள லயன் குடியிருப்பில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு வீடு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது.
குறித்த திடீர் பரவானது, இன்று (20.06.2024) காலை 6:30 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
திடீரென்று காலை வேளையில் தீ பரவியதையடுத்து வீட்டில் உள்ளவர்கள் கூச்சலிட்டுக்கொண்டு வெளியில் ஓடிவந்துள்ளனர்.
உட்கட்டமைப்பு வசதிகள்
மேலும், வேகமாக பரவிய தீயை அதே தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் அனைவரும் இணைந்து நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த தீ விபத்தினால் உயிர் சேதம் எதுவும் இடம்பெறவில்லை என்றாலும் இதில் பல பெறுமதியான வீட்டு உபகரணங்கள் எரிந்து நாசமாகியுள்ள நிலையில் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவிக்கின்றார்.
அதேவேளை, தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க தோட்ட நிர்வாகம் மற்றும் பிரதேசவாசிகள் நடவடிக்கை எடுத்துள்ளன.
மேலும், இந்த தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் இதுவரை தெரிய வராத நிலையில் தீ விபத்து தொடர்பான விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam