விபத்தில் சிக்கிய ஐரோப்பிய நாடொன்றிலிருந்து இலங்கை வந்த காதலர்கள்
இலங்கைக்கு சுற்றுலா வந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த காதலர்கள் விபத்தில் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொஸ்லந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லவாய பெரகல வீதியில் முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியது.
நெதர்லாந்தை சேர்ந்த 29 லோனி ஹைமன்ஸ் தனது காதலனுடன் சென்ற வேளையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
வீதி விபத்து
குறித்த பெண்ணே இந்த முச்சக்கரவண்டியை ஓட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
தியலும நீர் வீழ்ச்சியை பார்வையிட சென்ற போதே விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த இளைஞனும் பெண்ணும் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொஸ்லந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam
