திம்புல்ல- யுலிபீல்ட் வனப்பகுதிக்கு தீ வைப்பு
வெப்பநிலை உச்சமடைந்து வரும் நிலையில் திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுலிபீல்ட் வனப்பகுதிக்கு நேற்றையதினம்(1.4.2026)இனந் தெரியாத விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வளமான காட்டுப்பகுதியில் பல ஏக்கர்கள் அழிந்து நாசமடைந்துள்ளன.
கடும் வெப்பமான காலநிலை நிலவுவதனாலும் காற்று வீசுவதனால் தீ வேகமாக பரவி வருகின்றன.இதனால் தீயினை கட்டுப்படுத்துவது கடினமாக விடயமாக மாறியுள்ளது.
கைது நடவடிக்கை
இந்த காட்டுப்பகுதிக்கு தீ வைக்கப்பட்டதன் காரணமாக எமது நாட்டுக்கே உரித்தான அரிய வகை தாவரங்கள் விலையுயர்ந்த மரங்கள் சிறிய வகை உயிரினங்கள் ஆகியன அழிவடைந்து இருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.

பொழுதுபோக்கிற்காகவும்,விறகு சேகரிப்பதற்காகவும் மிருகங்களை வேட்டையாடுவதற்காகவும் மழை வரும் என்ற மூட நம்பிக்கையில் காடுகளுக்கு தீ வைக்கப்படுவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே காடுகளுக்கு தீ வைப்பவர்களை உடன் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
ஷமீந்திர ராஜபக்ச மற்றும் கபில சந்திரசேனவின் மனைவிக்கு பிடியாணை! விமான நிலைய அதிகாரிகளுக்கு சென்ற உத்தரவு