மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் தீயணைப்பு கருவி பொருத்தப்பட வேண்டும் என வலியுறுத்து
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் தீயணைப்பு கருவி கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தெரிவித்தார்.
இன்று(8.7.2026) மட்டக்களப்பு மாநகரசபையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று இரண்டு கடைகள் தீப்பற்றி எரிந்திருக்கிறது.
நடவடிக்கைகள்
அதுமட்டுமல்லாது அண்மைக்காலங்களாக எமது மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களிலே கடைத்தொகுதிகள், மற்றும் தங்குமிடங்கள் உள்ளிட்டவற்றில் அண்மைக்காலமாக தீப்பற்றி எரியும் நடவடிக்கைகள், அந்த அனர்த்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இத்தகைய இந்த அனர்த்தங்கள் நடைபெறும் போது மாநகர சபைக்கு கிடைக்கப்பெறுகின்ற அறிவுறுத்தல்களுக்கு அமைய எங்களது மாநகர சபையிலிருக்கிற தீயணைப்பு பிரிவினர் தங்களை அர்ப்பணித்து அந்த தீயணைப்பு செயற்பாடுகளைச் செய்து அவற்றை காப்பாற்றி வருகின்றனர்.

நேற்று நடந்த அந்த இரண்டு கடைகளிலும் மின்னொழுக்கு காரணமாக அந்த தீ ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அது எப்படியாக இருந்தாலும், தீ அனர்த்தம் ஒன்று ஏற்படும் போது அதனை அணைப்பது மாநகர சபைக்குரிய ஒரு சமூகக் கடமை ஒன்று. அந்த தீ பாதுகாப்பை நாங்கள் ஏற்படுத்தி அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பது அதுவும் ஒரு தலையாய கடமையாகும் எமக்கு இருந்து கொண்டிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.