பட்டாசு வகைகளின் தரத்தை பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை
நாட்டில் விற்பனை செய்யப்படும் பட்டாசு வகைகளின் தரத்தை பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண் மருத்துவர்கள் சங்கத்தினால், இலங்கை தர நிர்ணய சபையிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் ஏற்படக்கூடிய விபத்துக்களை தவிர்ப்பது தொடர்பில் தேசிய கண் மருத்துவமனையில் நேற்று விசேட விழிப்புணர்வு ஊடக சந்திப்பொன்று நடத்தப்பட்டது.
நாட்டில் விற்பனை செய்யப்படும் பட்டாசு வகைகளின் பொதிகளில் அவை பயன்படுத்தும் முறை, அவற்றின் உள்ளடக்கம் பற்றிய விபரங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக கண் மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டொக்டர் குசும் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
தரம் குறைந்த பட்டாசு
எனினும், இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அநேகமான பட்டாசு வகைகளின் பொதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளடக்கப் பொருட்கள் அவற்றில் உண்மையாக இருப்பதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் பட்டாசு வெடிக்கும் போது அநேகமானோர் விபத்துக்களை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை தர நிர்ணயசபை பட்டாசு வகைகள் தொடர்பிலான தரத்தை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |