மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் தீப்பரவல்
மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் நேற்று (01) பகல் 12.30 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
மின் ஒழுக்கு காரணமாக இத் தீ பரவல் ஏற்பட்டிருக்கலாமென தெரியவருகிறது.
தீக்கட்டுப்பாடு
மின் ஒழுக்கு ஏற்பட்டு களஞ்சியசாலையில் தீ பரவியதையடுத்து பொதுமக்கள், பிரதேச சபை ஊழியர்கள், பாடசாலை ஆசிரியர்கள் இணைந்து நீரைக் கொண்டு அணைத்து தீ பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

சுமார் அரை மணி நேர போராட்டத்தின் பின்னர் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்போது மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் காணப்பட்ட கதிரை, மேசை, ஏனைய பெறுமதியான பல உபகரணங்கள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளன. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri