தலைமன்னாரில் பனை மரத் தோப்பில் தீ விபத்து
தலை மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள கட்டுக்காரன் குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில் உள்ள பருத்திப்பண்ணை கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள பனை மரத் தோப்பில் தீ விபத்து ஏற்பட்டது.
குறித்த தீ விபத்தானது நேற்றையதினம்(31.3.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் தீ விபத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட பனை மரங்கள் சேதத்திற்கு உள்ளாகி உள்ளன.
தீ விபத்து
எனினும் குறித்த தீ விபத்தில் உயிர் சேதமோ, வீடுகளுக்கோ அல்லது சொத்துக்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.

தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தலை மன்னார் பொலிஸ் நிலைய போலீசார் செல்வேரி ராணுவ முகாமில் உள்ள இராணுவத்தினர், தலைமன்னார் கடற்படை , மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் இணைந்து தீயணைப்புத் துறை அதிகாரிகளுடன் கிராம மக்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்தினர்.
குறித்த தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன் பனை மரங்களுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 16 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam