மஹரகம பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல்! முகம்சுழிக்க வைக்கும் முதலாளிகளின் செயல்: வெளியானது வீடியோ ஆதாரம்
மஹரகம பிலியந்தலை வீதியில் பலிகெதர சந்திக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கடந்த ஜனவரி 19ஆம் திகதி ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தால் பாரிய தீ விபத்து ஏற்பட்டிருந்தது.
அதன்போது, அங்கிருந்த வர்த்தக நிலைய உரிமையாளர்கள், தீயில் சிக்கிய இருவரைக் காப்பாற்ற முயலாமல், வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க முயலும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரீடி கேமராவில் பதிவாகியுள்ளது.
தீக்காயங்களுக்கு உள்ளான இருவரும் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தனர்.
அவர்களது மரணம் தொடர்பில் மஹரகம காவல்துறையினர் உரிய விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் உட்பட உறவினர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
சம்பவத்தில் பிலியந்தலை, மகுலுதுவ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பிரியந்த சஞ்சீவ மற்றும் பிலியந்தலை, கோரகபிட்டிய எலபஹல வீதியைச் சேர்ந்த அஸ்ல ஜயசிங்க (26) என ஆகியோரே உயிரிழந்தனர்.
உயிரிழந்த இருவரும் உறவினர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 19ஆம் திகதி மேற்கூறிய வர்த்தக நிலையத்தில் இருவரும் பணியாற்றிவந்தபோது, திடீரென வெடிப்பொன்று ஏற்பட்டதையடுத்து தீ பரவியுள்ளது.
எனினும், அதன் உரிமையாளர்கள் தீயில் சிக்கியவர்களை மீட்காமல் வர்த்த நிலையத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் தீக்காயங்களுக்கு உள்ளான, இருவரும் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பிரியந்த சஞ்சீவ கடந்த 23ஆம் திகதியும், அசேல சம்பத் 4 ஆம் திகதியும் உயிரிழந்துள்ளனர்.
அசேல சம்பத்தின் உடலை பெற்றுக்கொள்ள சென்ற போது அவருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி கடந்த 8ஆம் திகதி, சடலம் ஓட்டமாவடி கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
எவ்வாறாயினும், வர்த்தக நிறுவனத்தினரிடமிருந்து தமக்கு எந்த நியாயமும் கிடைக்கவில்லை நடத்தப்படவில்லை எனவும், காவல்துறையினர் தலையிட்டு நீதியை நிலைநாட்டவில்லை எனவும் உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
அத்துடன், வர்த்தக நிலைய உரிமையாளர்கள் வந்து, தமக்கு பணம்வழங்கி முறைப்பாட்டை மீளப் பெறுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர் என உறவினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்..