மட்டக்களப்பு - ஏத்தாலைக்குளம் பறவைகள் சரணாலயத்தில் தீப்பரவல்
மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் ஏத்தாலைக்குளம் பறவைகள் சரணாலயத்தில் நேற்று (24.07.2025) மாலை வேளையில் தீ பரவல் சம்பவம் பதிவாகியுள்ளது.
மெதுமெதுவாக பரவ ஆரம்பித்த தீ சரணாலயத்தை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.
பல்வேறு பிரயத்தனங்களுக்கு மத்தியில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலயம்
மட்டக்களப்பு குருக்கள்மடம் பறவைகள் சரணாலயம் கடந்த வருடம் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பறவைகள் சரணாலயமாக பிரகடனப்படுத்தப்பட்டதுடன் கிழக்கு மாகாணத்தில் முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலயமாக இது காணப்படுகிறது.
இதேபோல் கடந்த ஆண்டும் 27.09.2024 திகதியில் பாரியளவு, தீப்பரவல் இதேகுருக்கள்மடம் ஏத்தாலைக்குளம் பறவைகள் சரணாலயத்தில் ஏற்பட்டிருந்தது.
உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள்
மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் கண்காணிப்பின் கண்காணிக்கப்பட்டு வருகின்ற இப்பறவைகள் சரணாலயத்திற்கு இலட்சக்கணக்கிலான உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் வருகை தருகின்றன.
இதனால் இப்பறவைகளின் நிலைத்திருப்பிற்கு இச்சம்பவம் சிக்கலானதாக அமைந்ததாக சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.












