வெளிநாடொன்றில் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து! ஒருவர் பலி: 26 பேர் காயம்
ஜப்பானின் கன்மா மாகாணத்தில் உள்ள மினகாமி பகுதியில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, அந்தப் பகுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 26 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இரண்டு லொறிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஆரம்பித்துள்ளது.
விசாரணைகள்
இதனைத் தொடர்ந்து சுமார் 50 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் டோக்கியோவைச் சேர்ந்த 77 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் விபத்தில் காயமடைந்த 26 பேரில் ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தினால் பல வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை விவகாரத்தில் பிற நாடுகள் முன்வைத்த விமர்சனங்கள்: ஜி.எல்.பீரிஸின் நூல் எடுத்துரைத்துள்ள விடயம்