வைத்தியசாலையில் தீ விபத்து: எரிந்து சாம்பலாகிய மருந்துகள்(Photo)
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உள்ள மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீயில் காலாவதியான மருந்துகளே எரிந்ததாக வடமாகாண சுகாதார பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் மாலை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உள்ள மருந்து களஞ்சியத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்துத் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தீ விபத்து தொடர்பில் தொடரும் விசாரணை

விபத்து ஏற்பட்டமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்ததோடு இழப்பீடு தொடர்பில் விசாரணைகளின் பின்னரே தெரியவரும் என தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நாட்டில் மறந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு
ஏற்பட்டு வரும் நிலையில் எவ்வாறு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் காலாவதியான
மருந்துகள் சேமிக்கப்பட்டது என்ற சந்தேகங்கள் எழுகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் மருந்து களஞ்சியத்தில் இன்று(26) மதியம் 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து காரணமாக வைத்தியசாலையின் மருந்து களஞ்சியத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து


இதன்போது பெருமளவான மருந்துகள் எரிந்து சாம்பலாகியுள்ளன.
தீ விபத்துக்கு மின்சார கோளாறே காரணம் என அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராணுவ வீரரின் செயல்

இதேவேளை தீ பரவலை அவதானித்த இராணுவ வீரர் ஒருவர் விரைந்து செயற்பட்டு மேலும் ஏற்படவிருந்த அழிவினை தடுத்து நிறுத்தியுள்ளார் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam