உக்ரைனில் ஐந்து தொடரூந்து நிலையங்கள் மீது ரஷ்யாவின் தாக்குதல்கள்! பொதுமக்களுக்கு பாதிப்பு!
உக்ரைனின் மத்திய மற்றும் மேற்கு உக்ரைனில் உள்ள ஐந்து தொடரூந்து நிலையங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக உக்ரைன் தொடரூந்துத்துறை தெரிவித்துள்ளது.
இன்று திங்கள்கிழமை காலை ஒரு மணி நேரத்திற்குள் இந்த தாக்குதல்கள் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது்
இதன்போது பொதுமக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிழக்கு உக்ரைனிய நகரமான கிராமடோர்ஸ்கில் உள்ள தொடரூந்து நிலையத்தில் கடந்த மாதம் ரஷ்யப் படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்
இதேவேளை உக்ரைன் எல்லைக்கு அருகாமையில் உள்ள ரஷ்ய நகரமான Bryansk இன்று திங்கட்கிழமை அதிகாலை இரண்டு தீ விபத்துகள் ஏற்பட்டதாக அவசர சேவைகளை மேற்கோள் காட்டி ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எண்ணெய் சேமிப்பு கிடங்கில் ஒரு தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும் இரண்டாவது இடம் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவங்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
. தீவிபத்துக்கான காரணம் எதுவும் கூறப்படவில்லை உக்ரைனில் நடந்த போருடன் தொடர்புடையவை என்பதற்கான உடனடி அறிகுறி எதுவும் இல்லை,
இருப்பினும் ரஷ்யா முன்பு அதே பிராந்தியத்தில் உக்ரைன் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இரண்டு குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் ரஷ்யாவின் ரியா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
எனினும் நகருக்கு மேலே உலங்கு வானுார்திகள் எவையும் பறந்ததை தாங்கள் பார்க்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.