மெக்சிகோவில் குடியேற்றவாசிகளின் தடுப்பு நிலையத்தில் தீ விபத்து: 39 பேர் பலி!
மெக்சிக்கோவில் குடியேற்றவாசிகளின் தடுப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக மெக்சிக்கோ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், காயமடைந்துள்ள 29 பேர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக மெக்சிகோவின் தேசிய குடிவரவு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த அனர்த்தம் இன்றைய தினம் (28.03.2023) இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குடியேற்றவாசிகள் உயிரிழப்பு
அமெரிக்காவுடனான எல்லையிலுள்ள குடியேற்றவாசிகளுக்கான தடுப்பு நிலையமொன்றில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
சம்பவத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த குடியேற்றவாசிகள் 39 பேர் உயிரிழந்துள்ளதாகத் மெக்சிக்கோ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
#Comunicado ?️| @INAMI_mx lamenta el fallecimiento de 39 personas migrantes extranjeras, derivado de un incendio que se originó poco antes de las 22:00 hrs del lunes en el área de alojamiento de la Estancia Provisional de Cd. Juárez, Chihuahua. https://t.co/NCe0yExH9T pic.twitter.com/vhT9cgXzsq
— INM (@INAMI_mx) March 28, 2023